வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (16/03/2017)

கடைசி தொடர்பு:14:15 (16/03/2017)

தமிழக பட்ஜெட் : கடன் சுமை இருந்தாலும் புதிய வரிகள் ஏதும் இல்லை!

2017-18 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல்  செய்தார். அதன்படி, மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி. மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி.
 

Jayakumar
 

தமிழகத்தில் ரூ.3,14,366 கோடி கடன் உள்ளது. இந்த நிதி ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை ரூ. 41,977 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக இருக்கும். தமிழகப் பொருளாதார வளர்ச்சி 6.5% ல் இருந்து 7% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இ‌லவசத் திட்டங்களுக்கு மானியச் சுமை ‌அதிகரித்துள்ளதால், நிதி பற்றாக்குறை, கடன் சுமை உயர்ந்து வரு‌வதாகக் கூறப்பட்டது. இதனால், இந்த பட்ஜெட்டில் வருவாயை அதிகரிக்க, புதிய வரி விதிப்புகள் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், 2017-18 பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்துள்ளார். மேலும், ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தும்போது, தமிழகம் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்றும் குறிப்பிட்டார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க