ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் பணி மும்முரம்!

DMDK Mathivanan

ஆர்.கே.நகரில், வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் மதிவாணன், இன்று வேட்புமனு தாக்கல்செய்தார். மேலும், தி.மு.க சார்பில் போட்டியிடும் மருது கணேஷும் இன்று வேட்புமனு தாக்கல்செய்வார் என்று தகவல்கள் கூறுகின்றன.

தேர்தல் மன்னன் பத்மராஜன்

அதேபோல, தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜனும் இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல்செய்தார். அவர் 164-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

படங்கள்: ஶ்ரீநிவாசுலு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!