விராலிமலைக் கலவரம் : 51பேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு நடத்திய போராட்டத்தில், காவலர்கள் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து கலவரமானது. கலவரம் தொடர்பாக 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, நேற்று இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் கலவரம் மூண்டது. கலவரம் தொடர்பாக 51 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொலை முயற்சி, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. மேலும், கலவரம் பரவாமல் இருப்பதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். 

- சி.ய.ஆனந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!