Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் : டெல்லியில் தமிழக விவசாயிகள் திட்டவட்டம்!

டெல்லி, ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் நான்காவது நாளாக தொடர் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள், சட்டை அணியாமல்  உடலில் நாமத்தைப் பூசிக்கொண்டும் கழுத்தில் மண்டை ஓடுகளைத் தொங்கவிட்டபடியும் அமர்ந்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close