வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (17/03/2017)

கடைசி தொடர்பு:13:54 (17/03/2017)

மதுசூதனனுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்தில் மனு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு 'இரட்டை இலை' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனோஜ்பாண்டியன் மனு அளித்துள்ளார். 

madhusudhanan
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்குப் போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது. 'இரட்டை இலை' சின்னத்துக்கு சசிகலா தரப்பினர் மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் இடையே கடும் போட்டி  நிலவுகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க கட்சியின் சட்ட விதிகளின்படி 'இரட்டை இலை' சின்னம் மதுசூதனனுக்குத்தான் ஒதுக்கப்பட வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளித்துள்ளனர். மனுவில் மதுசூதனன் மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் கையெழுத்திட்டுள்ளனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க