Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்.கே.நகரில் 2.62 லட்சம் வாக்காளர்கள் - ராஜேஷ் லக்கானி

ஆர்.கே.நகரில் 2.62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று துவங்கியது. 

Rajesh Lakhoni

இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'ஆர்.கே.நகரில் மொத்தம் 51 வாக்குச்சாவடி மையங்களில் 256 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அங்கு, 1024 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, 1,28,305 ஆண் வாக்காளர்கள், 1,34,307 பெண் வாக்காளர்கள், 109 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 62  ஆயிரத்து 721 வாக்காளர்கள்  உள்ளனர்.

தேர்தல் பணிகளில் 1,842 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான செலவினப்பார்வையாளர் அபர்ணா வில்லூரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர், வருகின்ற 24-ம் தேதி சென்னை வருகை தர உள்ளார் ' என்றார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close