வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (17/03/2017)

கடைசி தொடர்பு:14:24 (17/03/2017)

முத்துக்கிருஷ்ணனின் அலைபேசி அழைப்புகள், முகநூல் சாட் ஆய்வு!

தமிழகத்தைச் சேர்ந்த ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் அலைபேசி அழைப்புகள், ஃபேஸ்புக் சாட், குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றை காவல்துறை தீவிரமாக ஆய்வுசெய்துவருகிறது.

Muthukrishnan
 

கடந்த 13-ம் தேதி முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர், தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் கூறினர். இந்நிலையில், முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக டெல்லி காவல்துறை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறது. 

பின்வரும் கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது :

*முத்துக்கிருஷ்ணனின் லேப்டாப், அலைபேசி உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்யஉள்ளனர். 

* முத்துக்கிருஷ்ணனை வழிநடத்தும் பேராசிரியர்கள் இருவரை விசாரிக்க உள்ளனர்.

* பல்கலைக்கழகத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக முத்துக்கிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இது குறித்து பல்கலைக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

*முத்துக்கிருஷ்ணனின் விடுதி அறையில், அவருடன் தங்கி இருந்த மாணவரிடம் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறினாரா என்று விசாரிக்க உள்ளனர்.

*மார்ச் 13-ம் தேதி இரவு தற்கொலை செய்துகொண்ட முத்துக்கிருஷ்ணன், அன்று காலை ஒரு பெண்ணுடன் அலைப்பேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது. அதைக் குறித்தும் காவல்துறை விசாரிக்க உள்ளனர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க