அடிப்படை வசதியற்ற தென்காசி அரசு மருத்துவமனை! | Tenkasi Government Hospital on the poor condition!

வெளியிடப்பட்ட நேரம்: 04:11 (18/03/2017)

கடைசி தொடர்பு:13:44 (18/03/2017)

அடிப்படை வசதியற்ற தென்காசி அரசு மருத்துவமனை!

தென்காசி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததால், நோயாளிகள் தரையில் படுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் நெல்லைக்கு அடுத்தபடியாக பொது மருத்துவமனை அமைந்துள்ளது தென்காசியில்தான். இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.

பல்வேறு சிறப்பு பிரிவுகளும் செயல்பட்டுவருகின்றன. தற்போது தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்கள் இந்த மருத்துவமனையில்தான்  சிகிச்சைபெற்றுவருகின்றனர். இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்குப் போதிய வசதிகள் இல்லை. இந்த மருத்துவமனையில் சுகாதாரம் மட்டுமின்றி, குடிநீர், கழிப்பிடவசதிகள் மிகவும் மோசமாக உள்ளது. ஏற்கெனவே, உடல்நலக் குறைவு காரணமாக இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு,  மருத்துவமனையிலும் சுகாதாரமில்லாமல், படுப்பதற்கும் கட்டில்கள் இல்லாமல் தரையில் படுக்கும் அவலம் இருந்துவருகிறது