வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (18/03/2017)

கடைசி தொடர்பு:13:26 (18/03/2017)

கங்கை அமரன் குறித்து தமிழிசை கலகல பேச்சு!

தமிழிசை செளந்தரராஜன்- கங்கை அமரன்

தனது பிரபலத்தைப் பயன்படுத்தாமல், வேட்பாளராக கங்கை அமரன் உயர்ந்திருக்கிறார் என்று  பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம் சூட்டினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், தி.மு.க சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரன், பன்னீர் அணி சார்பில் மதுசூதனன், பா.ஜ.க சார்பில் கங்கை அமரன், தே.மு.தி.க சார்பில் மதிவாணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர்த் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரனை அறிமுகம்செய்துவைக்கும் நிகழ்ச்சி, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது பிரபலத்தைப் பயன்படுத்தாமல், வேட்பாளராக கங்கை அமரன் உயர்ந்திருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதிக்காக தனித் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார். மேலும், தமிழகத்துக்கு நீட் (NEET) தேர்வு வேண்டும் என்பதே என் கருத்து என்றார் தமிழிசை.

இதைத் தொடர்ந்து பேசிய கங்கை அமரன், என்னை வேட்பாளராகத் தேர்வுசெய்த பா.ஜ.க தலைமை மற்றும் தமிழிசைக்கு நன்றி என்றார்.