வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (18/03/2017)

கடைசி தொடர்பு:16:59 (18/03/2017)

விபத்தில் உயிரிழந்த அஸ்வினின் உடல் ஒப்படைப்பு!

கார் விபத்தில் உயிரிழந்த கார்பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதாவின் உடல்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த கார்பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா இருவரும், இன்று காலை பிஎம்டபிள்யூ Z4 காரில் சென்றுகொண்டிருந்தனர். பட்டினப்பாக்கம் அருகே செல்லும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதால், கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தற்போது, அஸ்வின் மற்றும் அவரது மனைவி நிவேதாவின் உடல்கள் பிரேதப் பரிசோதனை முடிந்து, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.