ஆர்.கே.நகர் வேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட்! | Marxist Communist party announced their candidate for R.K.Nagar by election

வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (18/03/2017)

கடைசி தொடர்பு:17:34 (18/03/2017)

ஆர்.கே.நகர் வேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன் போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேர்தலில் போட்டியிடுகிறோம். விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தரவேண்டும். மக்கள் நலக் கூட்டணி தொடர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். தமிழகத்தில் மாற்று அரசியல் தற்போது தேவைப்படுகிறது. மாற்றத்துக்கான நல் அரசியலை முன்னெடுத்து செல்லவே ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறோம்' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லோகநாதன் பேசுகையில், 'தமிழக சட்டப்பேரவையில் ஒரு கம்யூனிஸ்ட் உறுப்பினர் கூட இல்லாமல் அங்கே என்னவெல்லாம் நடக்கிறது என மக்களுக்கே தெரியும். மக்கள் உரிமைகளை மட்டும் பேசும் சட்டமன்றம் தேவைப்படுகிறது' என்றார்.