வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (19/03/2017)

கடைசி தொடர்பு:09:20 (20/03/2017)

‘பிரிட்ஜோ மரணம் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு - சைலேந்திர பாபு தகவல்

'இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோவின் மரணம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று தமிழக கடலோரக் காவல்படை ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ மார்ச்-6 ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது இலங்கைக் கடற்படை அவரை சுட்டுக் கொன்றது. மேலும் அவருடன் மீன் பிடிக்கச் சென்ற சரோன் என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிரிட்ஜோ மரணம் தொடர்பாக தற்போது தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரிட்ஜோ

சென்னை துறைமுகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கடலோர காவல்படையின் ஏடிஜிபி சைலேந்திர பாபு, “கடந்த ஆண்டில் மட்டும்  ஹெலிகாப்டரின் உதவியுடன் 299 மீனவர்கள் மற்றும் படகுகள் மீட்கப்பட்டுள்ளன. கடலோர காவல்படையில் அதிவிரைவு படகுகள் பயன்படுத்துவதால் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், ‘நாகப்பட்டினம் முதல் ராமேஸ்வரத்துக்கு இடையே ஐந்து தளங்கள் தமிழ்நாடு கடலோர காவல்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது' என்றும் தெரிவித்தார்.