மயில்கள் விஷம் வைத்துக் கொலை | Peacocks poisoned at Puducherry

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (19/03/2017)

கடைசி தொடர்பு:07:51 (20/03/2017)

மயில்கள் விஷம் வைத்துக் கொலை

புதுச்சேரியில் உள்ள சந்தைப் புதுக்குப்பம் கிராமத்தில் மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காடுகளில் மான், யானை மற்றும் சில சமயங்களில் புலி போன்ற விலங்குகள் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன. பணத்துக்காகத் தந்தத்தை வெட்டி எடுப்பதற்காக யானையும், கறிக்காக மான் போன்ற விலங்குகளும் கொடூரமாக வேட்டையாடப்படுகின்றன. இது குற்ற வழக்குகளாக பதியப்படும்.

தேசியப் பறவையான மயில் வேட்டையாடுதல் என்பது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று. இந்த நிலையில் புதுச்சேரியில் சமூக விரோதிகள் சிலர் மயிலுக்கு விஷம் வைத்துக் கொலை செய்துள்ளனர். சமூக விரோதிகள் வைத்த விஷத்தை உண்ட 24 மயில்கள் இறந்துள்ளன. தேசியப் பறவையான மயில்களை கொன்றது குறித்து காவல்துறையினரும், வனத்துறையினரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


[X] Close

[X] Close