‘நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய்...’- ட்விட்டரில் உருகும் கமல் | Kamal tweets about his Late brother in twitter

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (19/03/2017)

கடைசி தொடர்பு:07:45 (20/03/2017)

‘நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய்...’- ட்விட்டரில் உருகும் கமல்

Kamal and Chandrahaasan

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியுமான சந்திரஹாசன் உடல்நலக்குறைவால் 82 வயதில் உயிரிழந்தார். லண்டனில், தனது மகள் அனுஹாசன் வீட்டில் இருந்த அவருக்கு நேற்று இரவு திடீரென்று கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உயிரிழந்தார். 

இந்நிலையில் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரஹாசனுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 'நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய்  அவரைப் பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான்  நிறைவேற்றவில்லை.' என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.