Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.மு.க-வின் முரசொலி வலைதளத்தை முடக்கியது லிஜியன்!

தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் வலைதளம், லிஜியன் ஹேக்கர் குழுவால் முடக்கப்பட்டுள்ளது. 

Murasoli Website Hacked

அமெரிக்கா, ஸ்வீடன், கனடா போன்ற நாடுகளில் உள்ள ஹேக்கர்கள்மூலம் செயல்பட்டுவரும் ஹேக்கர் குழு, லிஜியன். அரசு நிறுவனங்கள் மற்றும் மதம் தொடர்பான வலைதளப் பக்கங்களை ஹேக் செய்வது லிஜியனின் பணி.  இந்த லிஜியன் குழு, ஏற்கெனவே ராகுல் காந்தி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்துள்ளது.

இந்நிலையில், தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான, முரசொலியின் வலைதளப் பக்கத்தை, லிஜியன் ஹேக்கர் குழு இன்று முடக்கியுள்ளது. குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குத் தடைவிதித்து, ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்று அதில் லிஜியன் குறிப்பிட்டுள்ளது.

முக்கியமாக, உத்தரப்பிரதேசத்தில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்றும் லிஜியன் அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும், மின்னணு வாக்கு இயந்திரம் குறித்த வீடியோ ஒன்றையும், அதில் லிஜியன் இணைத்துள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும் லிஜியன் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து சற்று நேரத்தில், வலைதளம் மீட்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close