அ.தி.மு.க-வுக்கு ஆதரவு: வைகுண்டராஜன் திடீர் முடிவு!

அ.தி.மு.க.-வுக்கு தொழிலதிபர் வைகுண்டராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Vaigundarajan ADMK

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசென்ற பிறகு, டி.டி.வி தினகரன் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், ஆர்.கே.நகர்  வேட்பாளராகவும் தினகரன் போட்டியிடுகிறார். இதற்கிடையே, ஆர்.கே.நகர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தினகரனை அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், டி.டி.வி.தினகரனை தட்சணமாற நாடார் சங்கத்தினர் சந்தித்து, ஆர்.கே.நகரில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது, கனிம மணல் ஆலைகளை மூடியதால், அரசு மீது அதிருப்தியில் இருந்த வைகுண்டராஜனும் உடன் இருந்தார். அரசு, கனிம மணல் வழக்கில், உயர்நீதிமன்றத்தில் 27-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

- ஆண்டனிராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!