அஸ்வின் சுந்தர் உயிரிழந்த 24 மணி நேரத்தில், சென்னையில் அடுத்தடுத்து நடந்த விபத்துகள்!

சென்னையில், சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அஸ்வின் சுந்தர் உயிரிழந்த 24 மணி நேரத்தில், சென்னையில் மூன்று விபத்துகள் அடுத்தடுத்து நடந்துள்ளன.

Accident

சென்னை, எம்.ஆர்.சி.நகரில் நடந்த கார் விபத்தில், ரேஸர் அஸ்வின் சுந்தர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின் சுவடுகள் அழிவதற்குள், சென்னையில் அடுத்தடுத்து விபத்துகள் நடந்துள்ளன.

* வால்டாக்ஸ் சாலையில் நேற்று சரக்கு ஆட்டோ மீது, ஆடி கார் மோதியதில், இரு பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. தப்பி ஓடிய கார் ஓட்டுநர் விக்னேஷை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

* செம்மஞ்சேரி அருகே, தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோவளம் அருகே சரக்கு வாகனம் மோதியதில், மூன்று மாணவர்கள் பலியாகினர். ஒருவர், மருத்துவமனையில்  சிகிச்சைபெற்றுவருகிறார்.

* எம்.சி.ஆர்.நகரில் அஸ்வின் சுந்தர் கார் விபத்து நடந்த இடத்திலேயே, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் இளைஞர் காயமடைந்தார்.

இந்த விபத்துகள் அனைத்தும், அஸ்வின் சுந்தர் உயிரிழந்த 24 மணி நேரத்தில் நடந்துள்ளன. இதனால், மக்களுக்கு சாலைப் போக்குவரத்து குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!