இது, ராணுவ நீதிமன்றம் அல்ல. மத்திய அரசை எச்சரிக்கும் உயர்நீதிமன்றம்! | This is not Military Court, Central Government is warned by High Court!

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (20/03/2017)

கடைசி தொடர்பு:18:39 (21/03/2017)

இது, ராணுவ நீதிமன்றம் அல்ல. மத்திய அரசை எச்சரிக்கும் உயர்நீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு தேவையில்லை என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Chennai high court

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என 11 பேர்,  தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அடங்கிய அமர்வு முன்பு, கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர்  14-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிபதிகள் அறிவுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து செல்லாததால், அவமதிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றுக்கு சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பால், 63 கோடி ரூபாய் செலவு ஏற்படுவதாக பால்கனகராஜ் தெரிவித்திருந்தார். இதன் மீதான வழக்கு, தற்காலிகத்  தலைமை நீதிபதி குலுவாடி ஜி. ரமேஷ் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பால், ஊழியர்கள் சிறைக்குள் நுழைந்ததுபோல உணர்கின்றனர். இது, மக்கள் நீதிமன்றம். ராணுவ நீதிமன்றம் அல்ல. மத்திய அரசை ஒதுங்கி இருக்கச் சொல்லுங்கள். சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புக்கு யார் உத்தரவிட்டது" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.