சேகர் ரெட்டிக்கு அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி!

சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், கைதாகி சிறையில் இருந்த சேகர் ரெட்டி, கடந்த 17-ம் தேதி ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். அவரை தற்போது அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளது. 

Sekhar reddy
 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ கைதுசெய்தது. சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கு முதலில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 

சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் கடந்த மார்ச் 17-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், இன்று சேகர் ரெட்டியிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணையின் முடிவில், சேகர் ரெட்டி மீண்டும் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!