Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி - கடலூரில் துயரச் சம்பவம்!

கடலூரில், பாதாளச் சாக்கடையைச் சுத்தம்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து, காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

பாதாளச் சாக்கடையைச் சுத்தம்செய்யும்போது, உரிய உபகரணங்களோடுதான் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்த வேண்டும். மேலும், மேற்பார்வையாளர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்பது போன்ற பாதுகாப்பு தொடர்பான உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்திருக்கின்றன.

எனினும், அவ்வப்போது இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடலூர் மோகினபாளையம் என்ற இடத்தில் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. அப்போது, பாதாளச் சாக்கடையில் இறங்கிய துப்புரவுத் தொழிலாளி வெளியே வராததால், மேலும் இருவர் உள்ளே சென்றுள்ளனர். அவர்களும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படையினர், துப்புரவுத் தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.

அவர்களது உடல்கள், கடலூர் அரசு மருத்துமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன. சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்கள் யார் என இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதே, தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement