தேனியில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் தடை! | Green tribunal cancels environment department's permit to theni neutrino lab

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (20/03/2017)

கடைசி தொடர்பு:18:09 (20/03/2017)

தேனியில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் தடை!

theni neutrino

தேனி மாவட்டம், தேவாரம் பொட்டிப்புரம் பகுதியில் அமைய உள்ள  நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பாக, இன்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்தது. அப்போது, சுற்றுச்சூழல் அனுமதியை ரத்துசெய்து உத்தரவிட்டது, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம். இப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனச் செழுமையும் பெற்றுள்ள பகுதி இது. இந்நிலையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த வனத்துறையின் அனுமதியைப் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

நியூட்ரினோ ஆய்வகத்துக்கு எதிராக 2015-ம் ஆண்டில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். நியூட்ரினோ திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட வல்லுநர் குழுவை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்தது. நியூட்ரினோ திட்டம் தொடர்பாக 3 மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்காக, மலையைக் குடைந்து சுமார் 8 லட்சம் டன் பாறைகளை அகற்றவேண்டியது இருக்கும். இந்நிலையில், ஆய்வகத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.