வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (20/03/2017)

கடைசி தொடர்பு:18:03 (20/03/2017)

நந்தினி கொலை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி தாயார் வழக்கு!


நந்தினி கொலை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி, அவரது தாயார் ராஜகிளி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூரில், கடந்த ஜனவரி 14-ம் தேதி இளம்பெண் நந்தினி நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் உள்பட, மூன்று பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

நந்தினி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாயார் ராஜகிளி, இன்று மனு தாக்கல்செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.