’தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது' திடுக் மருத்துவ அறிக்கை!

நடிகர் தனுஷின் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சைமூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dhanush

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமைகோரி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். 

இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல்செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ஆஜராகக் கூறி உத்தரவிட்டிருந்தது. 

Dhanush medical report

இந்த வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கை, இன்று உயர்நீதிமன்ற  மதுரைக் கிளையில் சமர்ப்பிக்கப்பட்டது. மருத்துவ அறிக்கையில், தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சைமூலமாக அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மிகப்பெரிய திருப்பமாக மருத்துவ அறிக்கை கருதப்படுகிறது. மேலும், விரிவான விசாரணை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

-செ.சல்மான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!