புற்றுநோய் கட்டியால் அவதிப்படும் ஆறு வயது சிறுவன். காரணம் தடுப்பூசியா?

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ராதாகிருஷ்ணன். கடந்த 2011-ம் ஆண்டு இவரின் ஆறு மாதக் குழந்தைக்கு, அங்கன்வாடி மையத்தில் வலது தொடையில் அம்மைத் தடுப்பூசி போடப்பட்டது. ஊசி போட்ட இடத்தில் சிறிய ரத்தக்கட்டு உருவானது.

நாளடைவில் சரியாகி விடும் என்று பெற்றோர்கள் கருதினர். ஆனால், கட்டி பெரிதாக வளர்ந்தது. தற்போது, சிறுவனுக்கு ஆறு வயதாகும் நிலையில், ரத்தக் கட்டி மூன்று கிலோ எடை கொண்ட கேன்சர் கட்டியாக மாறியுள்ளது.

Erode 6 yrs kid cancer
 

இந்தச் செய்தி, நாளிதழில் வெளியானது. நாளிதழ் செய்தியின்படி தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து, உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இன்று நடைபெற்ற விசாரணை முடிவில் பின்வருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது :

* ’புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை அளிப்பது குறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் உறுதிசெய்ய வேண்டும். சிறுவனை அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்க ஏற்பாடுசெய்ய வேண்டும். சிறுவனுடன் பெற்றொர் தங்கவும் ஈரோடு ஆட்சியர் ஏற்பாடுசெய்ய வேண்டும்’, என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்,  பல சட்டங்கள் இருந்தும் சிறுவனுக்கு நீதி கிடைக்காதது துரதிருஷ்டம் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர், புற்றுநோய் கட்டிக்கு தடுப்பூசி காரணமில்லை என்று தெரிவித்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!