வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (22/03/2017)

கடைசி தொடர்பு:14:48 (22/03/2017)

லால்குடி அரசு மருத்துவமனைக்குள் கொலை: இரண்டு பேர் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

Arrested

லால்குடி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர், தர்மன். இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் வினோத் என்பவருக்கும் வீட்டு வாசலில் தண்ணீர் ஊற்றியது தொடர்பாக சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன், இவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், தர்மன் கடுமையாகத் தாக்கப்பட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று மதியம் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த தர்மனை, அதே பகுதியைச் சேர்ந்த மருது என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பி ஓடினார்.

இதையடுத்து, அவரை போலீஸார், தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில். தப்பிச்சென்ற மருது,வினோத் ஆகிய இரண்டு பேரையும் லால்குடி போலீஸார் இன்று கைதுசெய்தனர்.

-சி.ய. ஆனந்தகுமார்