வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (22/03/2017)

கடைசி தொடர்பு:18:56 (22/03/2017)

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர்!

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

1995, 1996-ம் ஆண்டுகளில் டி.டி.வி.தினகரனின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. இதையடுத்து, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது அமலாக்கத்துறை.

அமலாக்கத்துறையின் இந்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

படம் : தி.குமரகுருபரன்