இலங்கைக் கடற்படையால் இன்றும் எட்டு மீனவர்கள் கைது!

இலங்கைக் கடற்படையினர்  நாகை மாவட்ட மீனவர்கள் எட்டு பேரையும், ஒரு விசைப்படகையும் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களை தடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடன் மீனவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இன்று மீண்டும் மீனவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-இரா.மோகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!