தொப்பி அணிந்து வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த தினகரன்..! 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்,  ’அ.தி.மு.க அம்மா கட்சி சார்பில் ’தொப்பி’ சின்னத்தின் கீழ் போட்டியிடும் டி.டி.வி.தினகரன், தொப்பி அணிந்து வந்து வேட்புமனு தாக்கல்செய்தார்.

T.T.V.Dinakaran

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்,  வேட்பு மனு தாக்கல்செய்ய இன்றே கடைசி நாள். இரட்டை இலையை முடக்கிய தேர்தல் ஆணையம், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 'அ.இ.அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா' என்ற பெயரும், 'மின்கம்பம்’ சின்னமும் ஒதுக்கியுள்ளது. மற்றொரு புறம் சசிகலா அணிக்கு, 'அ.இ.அ.தி.மு.க அம்மா' என்ற பெயரும், 'தொப்பி' சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது. 

புதிய சின்னத்தின் கீழ் மதுசூதனன் மற்றும் டி.டி.வி.தினகரன் வேட்புமனு தாக்கல்செய்தனர். இன்னும் சற்று நேரத்தில், தீபா பேரவை சார்பில் வேட்புமனு தாக்கல்செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வேட்புமனு தாக்கல்செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “ஆர்.கே.நகரில் மக்களுக்காக உழைப்பேன். ஜெயலலிதா மக்களுக்காகச் செய்ய நினைத்த திட்டங்களைச் செய்துமுடிப்பேன். அவரது கனவை நனவாக்குவேன். கட்சியைக் கைப்பற்ற நினைப்பவர்களின் சூழ்ச்சியை முறியடிப்பேன்” என்றார்.

படம் : வி.ஸ்ரீனிவாசலு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!