பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்! | Writer Ashokamithran passes away

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (23/03/2017)

கடைசி தொடர்பு:10:48 (24/03/2017)

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்!

ashokamithran

பிரபல எழுத்தாளர் அசோகமித்ரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.  இவரின் இயற்பெயர், தியாகராஜன். பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், இன்று, ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர், கரைந்த நிழல்கள் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவரது 'அப்பாவின் சிநேகிதர்' சிறுகதை தொகுப்புக்காக 1996-ல் சாகித்ய அகாடமி விருதை வென்றார்.

செகந்திராபாத்தில் பிறந்த இவர், தனது 21-வது வயதில் சென்னைக்குக் குடியேறினார். இவருக்கு, தமிழ்நாடு அரசு மும்முறை பரிசுகள் வழங்கி கவுரவித்துள்ளது. இலக்கியச் சிந்தனை விருதுகளை 1977-ம் ஆண்டிலும், 1984-ம் ஆண்டிலும் இருமுறை பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் விருதைப் பெற்றார். சாரல், இலக்கியச் சிந்தனை, அக்சரா ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.