கூவம், அடையாறு ஆறுகள்; பக்கிங்ஹாம் கால்வாய்..! அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, இன்று விசாரணை நடத்தியது.

அப்போது, கழிவுநீர் கடலில் கலப்பதால் நீர்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட மூன்று நீர்நிலைகளையும் பழைய நிலைக்குக் கொண்டு வர அரசின் நடவடிக்கை தேவைப்படுகிறது. குடியிருப்புகள், நிறுவனங்களின் கழிவுகளால் நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால், கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயைத் தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும்.

நீர்நிலைகளை மீட்டெடுக்க தனித்துறையை அரசு உருவாக்க வேண்டும். இயற்கை எழில் மிகுந்த ஆறுகளை மீட்டெடுத்துப் பயன்பாட்டுக்குத் தர வேண்டும். நகரின் கழிவுகளை மறுசுழற்சிசெய்து, வேளாண் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக, ஜூன் 30-ம்தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!