நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது - ஜே.பி.நட்டா

neet

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்துள்ளார். விலக்கு அளிப்பது தொடர்பாக பின்னர் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை இன்று காலை சந்தித்தனர். அப்போது, நீட் தேர்வு நடத்துவதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். அதற்கு ஜே.பி.நட்டா, 'தற்போது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி பின்னர் முடிவு எடுக்கப்படும்', எனக் கூறியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், 'முதுநிலை மருத்துவ படிப்பில் தமிழகம் பின்பற்றி வந்த இடஒதுக்கீட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை. அரசு கல்லூரி இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் விலக்கு கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு கோருவது தொடர்பாக சட்ட அமைச்சரை சந்தித்துப் பேச உள்ளேன்', என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!