ஆர்.கே.நகரில் எடைக்கு எடை தங்கம் வழங்க தயாராகும் கட்சிகள்! பொன்.ராதாகிருஷ்ணன் பகீர்

Pon Radhakrishnan

ஆர்.கே.நகரில் எடைக்கு எடை தங்கம் வழங்க கழக கட்சிகள் தயாராக உள்ளன என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, வாக்காளர்களுக்கு தி.மு.க, சசிகலா அணியினர் பணம் வழங்குவதாக பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்றார்.

மேலும், ஆர்.கே.நகரில் எடைக்கு எடை தங்கம் வழங்க கழக கட்சிகள் தயாராக உள்ளன என்ற பகீர் தகவலை வெளியிட்ட அவர், வீடுகள் வழங்க ரஜினிகாந்த் இலங்கை செல்வதில் தவறில்லை என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!