'தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும்' - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

Heat weather

இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. தமிழகத்தில் நாளுக்கு, நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடைகாலம் துவங்க உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் கடுமையான வெயில் நிலவி வருகிறது.   

இந்நிலையில், இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "குமரியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வறட்சி காரணமாக வட தமிழகத்தில் வறண்ட நிலை நிலவும். குறிப்பாக, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 38.8 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சேலத்தில் 19.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது" என்று கூறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!