மந்திரவாதி கார்த்தி குண்டர் சட்டத்தில் கைது

பெரம்பலூர் மந்திரவாதி கார்த்திக் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Perambalur Magician Karthi

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலக பின்புறத்தில் உள்ள எம்.எம்.நகரில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு, கடந்த சில வாரத்துக்கு முன் தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது, பில்லி சூனியம் கற்றுக்கொடுப்பதற்காக வீட்டில் பெண்ணின் சடலத்தை பதப்படுத்தி வைத்திருந்து மாந்திரிகம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புகாரின் பெயரில் மந்திரவாதி கார்த்திக் உள்பட நான்கு பேரை கைது செய்து பெண் சடலம் எப்படி வந்தது, யார் இந்த பெண், என்ற பல கோணத்தில் விசாரணை நடத்தினர் போலீசார்.

இதில் வெளிவந்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி தருபவையாக இருந்தது. இதையடுத்து, அந்த மந்திரவாதி கார்த்தி, தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இவர் கடந்த ஆண்டு,  மரத்தடியில் மனித மூளைகள் மற்றும் எலும்புகூடுகளை வைத்து மாந்திரிகம் செய்தவர்.

இந்நிலையில், மந்திரவாதி கார்த்தியை எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து திருச்சி மத்தியசிறையில் உள்ள கார்த்தியிடம், இந்த நகல் வழங்கப்பட்டது.

எம்.திலீபன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!