ஃபேஸ்புக்கில் பரப்புரையைத் தொடங்கிய ஓ.பி.எஸ்!

O.Panneerselvam

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வரும் ஏப்ரல் 12 -ம் தேதி நடைபெறவிருக்கிறது.  ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில்,  'அ.இ.அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா' என்ற கட்சியின் பெயரில், ' மின்கம்பம்’ சின்னத்தின் கீழ் மதுசூதனன் போட்டியிடுகிறார். 

அ.தி.மு.க இரண்டாக உடைந்ததில் இருந்து, சமூக வலைதளங்களில் தீவிரமான பரப்புரை மேற்கொண்டுவருகிறார் பன்னீர்செல்வம். ட்விட்டரில் இணைந்த சில நாட்களிலேயே, இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது, ஓ.பி.எஸ் அணி. தற்போது, சுமார் 65 ஆயிரம் பேர் பின்பற்றிவருகின்றனர். இந்த நிலையில், ஃபேஸ்புக்கிலும் பரப்புரைசெய்யத் தொடங்கியுள்ளனர்.  ஃபேஸ்புக்கில் ஆக்ட்டிவ்வாகியுள்ள ஓ.பி.எஸ், “ சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர்களுடன் தொடர்புகொள்வதில் மகிழ்ச்சி. தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல இணைந்துசெயல்படுவோம்’, என்று பதிவிட்டுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!