இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்! | R.K.Nagar by election final candidate list to be release today

வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (27/03/2017)

கடைசி தொடர்பு:11:23 (27/03/2017)

இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!

election

ஆர்.கே.நகர்த் தொகுதியில், வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. முக்கியக் கட்சிகளின் பலமுனைப் போட்டி அரங்கேறுகிறது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு,  இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. ஏப்ரல் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும்.

மருதுகணேஷ் ( தி.மு.க), மதுசூதனன் (அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா), டி.டி.வி தினகரன் ( அ.தி.மு.க அம்மா), மதிவாணன் (தே.மு.தி.க), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி), கங்கை அமரன் (பா.ஜ.க), தீபா (எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை) என 63 வேட்பாளர்களுக்கு மேல் களத்தில் உள்ளனர். 63 வேட்பாளர்களுக்கு மேல் இருந்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக, வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தலில் வாக்குப்பதிவு எந்த முறையில் நடைபெறும் என்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாக இருக்கிறது.