ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் 62 பேர்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 62 பேர் போட்டியிடுகின்றனர்.

Praveen Nair

ஆர்.கே.நகர் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் அ.தி.மு.க அம்மா கட்சி சார்பில் தினகரன், அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர். அதேபோல், தி.மு.க-வில் மருது கணேஷ், தே.மு.தி.க-வில் மதிவாணன் பா.ஜ.க-வில் கங்கை அமரன், சி.பி.எம் சார்பில் லோகநான், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இதற்காக 127 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில் 57 மனுக்களை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதையடுத்து, 70 பேரின் மனு ஏற்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர்கள், மனுவை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இன்று மட்டும் 8 சுயேட்சை வேட்பாளர்கள், மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, மொத்தம் 62 வேட்பாளர்கள் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!