பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்!

சென்னை:சென்னை அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்பட்டதை  கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்  பெறப்பட்டுள்ளது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பயிற்சி   மருத்துவர்கள்,முதுநிலை பயிற்சி டாக்டர்கள் தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம்  முதல் வேலை  நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தமிழகம் முழுவதுமுள்ள அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வந்த  நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
 

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் உடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து பயிற்சி டாக்டர்கள்,  தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!