மெரினாவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிப்பு. இயக்குநர் கௌதமன் நேரில் சென்று சந்தித்தார்!

கௌதமன்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மெரினா கடற்கரையில்  மிகப்பெரிய போராட்டம் நடைபெறப்போவதாக கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, மெரினாவில் நேற்று முதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதையொட்டி, இன்று காலை மெரினாவில் கூடிய இளைஞர்களில் சிலர், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான பதாகைகள் ஏந்தியபடி கடலுக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தினர். பின்னர், அவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்து, மைலாப்பூரில் இருக்கும் சமுதாயக் கூடம் ஒன்றில் அடைத்தனர். இப்படி, மெரினாவில் போராடிய 13 இளைஞர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த நிலையில்... இயக்குநர் கௌதமன், இளைஞர்களை அடைத்து வைத்திருக்கும் இடத்துக்குச் சென்று, போலீஸாரிடம் இளைஞர்களை விடுவிக்க வலியுறுத்தினார். 

Diarector gauthaman

இளைஞர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கௌதமன், 'தமிழ் கலாசாரம் மற்றும் உரிமையைப் பறிப்பதிலும் அவமானப்படுத்துவதிலும் தொடர்ந்து நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டுவருகின்றன. நாங்கள் இறுதி வரை அறவழியில் போராடுவதிலேயே உறுதியாக இருக்கிறோம். ஆனால், எங்கள் மீது வன்முறை திணிக்கப்பட்டால், எப்படி எதிர்கொள்வது என்பது தெரியும்' என்று கூறியுள்ளார்.

படம்: தி.குமரகுருபரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!