வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (30/03/2017)

கடைசி தொடர்பு:14:17 (30/03/2017)

விவசாயிகளுக்காகக் களமிறங்கிய மாணவர்கள்

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

வறட்சி நிவாரண நிதி, பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழக மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.

சென்னை, மெரினாவில் நடத்திய மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து திருச்சி, கோவை, மதுரை, காஞ்சிபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும், சாலை மறியல் செய்தும் கைதாகிவருகின்றனர்.

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று, வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, பிராட்வே பகுதியில் சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். அப்போது, விவசாயிகளுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் ஆதரவளிக்க வேண்டுமென மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.