வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (30/03/2017)

கடைசி தொடர்பு:09:22 (31/03/2017)

ஓ.பன்னீர்செல்வம் அணியின் மின்கம்பம் சின்னத்தை முடக்க சசிகலா அணி மனு!

'பன்னீர்செல்வம் அணியின் மின்கம்பம் சின்னத்தை முடக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்திடம் சசிகலா அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Electric pole

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ஏப்ரல் 12-ம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க-வின் சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி ஆகிய இரு அணிகளும் போட்டியிடுகின்றன. இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியதையடுத்து, பன்னீர்செல்வம் அணிக்கு அ.இ.அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா என்ற கட்சிப் பெயரும், மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டது. அதேபோல, சசிகலா அணிக்கு அ.இ.அ.தி.மு.க அம்மா என்ற கட்சிப் பெயரும், தொப்பி சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பன்னீர்செல்வம் அணியின் மின்கம்பம் சின்னத்தை முடக்கக் கோரி, சசிகலா அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர். பன்னீர்செல்வம் அணியினர், மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலை சின்னத்தைப் போன்று தவறாகப் பரப்புரை செய்வதாக, சசிகலா அணி தரப்பினர் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர்.

ஆனால், சசிகலா அணியின் புகாருக்கு, பன்னீர்செல்வம் அணியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மின்கம்பம் சின்னத்தைத்  தவறாகப் பயன்படுத்தவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.