வெளியிடப்பட்ட நேரம்: 07:49 (31/03/2017)

கடைசி தொடர்பு:11:52 (31/03/2017)

விவசாயிகளுக்கு ஆதரவு: ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்!

stalin

விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள் கடந்த 17 நாட்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களைப் பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர். பிற மாநில விவசாயிகளும் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் தீவிரமாகப் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். மேலும், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்திக்க இருக்கிறாராம். அவருடனான சந்திப்பில், ஹைட்ரோகார்பன் திட்டம், அதற்குத் தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் பேசுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.