ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த டி.டி.வி தினகரன் ஆதரவாளர் கைது!

ஆர்.கே.நகரில், பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அ.தி.மு.க அம்மா ஆதரவாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Dinakaran Supporter Karuna Moorthy

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், ஏப்ரல் 12-ம் தேதி நடக்க உள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்கிடையே, தேர்தலை நடத்துவது குறித்து, தேர்தல் ஆணையமும் ஆலோசனைகளை நடத்திவருகிறது. இதையொட்டி, தலைமைத் துணைத்தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகரில் கண்காணிப்புக் கேமரா அமைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சாஸ்திரி நகரில், வாக்காளர்களுக்கு டி.டி.வி தினகரன் ஆட்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்த கருணாமூர்த்தி என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  அவர், வாக்காளருக்கு பணம் கொடுக்கும் வீடியோ பதிவைவைத்து, காவல்துறையினர் அவரைக் கைதுசெய்துள்ளனர். இதனையடுத்து, அவரை ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, வீடியோவில் பதிவான மேலும் இருவரை, காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!