பங்குச் சந்தையில் நஷ்டம் - வேதனையில் தொழிலாளி தற்கொலை!

பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால், மில் தொழிலாளி ஒருவர் அலுவலக அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குருவிக்குளத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர், அருகில் உள்ள மில்லில் பணியாற்றிவந்தார். பங்குச்சந்தை வர்த்தகத்தில் நாட்டம் கொண்ட இவர், அதில் தொடர்ந்து முதலீடும் செய்துவந்துள்ளார். இந்த நிலையில், பங்குச்சந்தை வர்த்தகத்தில் அவருக்கு 2 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மில் தொழிலாளி ராமகிருஷ்ணன், கோவில்பட்டியில் உள்ள தனியார் பங்குச்சந்தை சேவை மைய அலுவலக அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது சட்டைப் பையில் இருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், 'பங்குச்சந்தையில் ஏற்பட்ட இழப்பால் தற்கொலைசெய்து கொள்கிறேன்' என எழுதப்பட்டிருந்தது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

- இ.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!