வெளியிடப்பட்ட நேரம்: 20:56 (01/04/2017)

கடைசி தொடர்பு:21:11 (01/04/2017)

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்

நிதி ஆண்டு நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று புதிய நிதி ஆண்டு பிறந்துள்ளது. இதையொட்டி வங்கிகளில் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்தின் இறுதிநாட்களிலேயே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யப்படும். ஆனால், இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதியாண்டு இறுதி என்பதால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, ஏப்ரல் முதல் வாரத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  இது வழக்கமாக ஏற்படும் தாமதம் என்றாலும் அரசு ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.