ஆர்.கே.நகருக்கு மேலும் ஏழு துணை ராணுவக்குழுக்கள் வருகை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகின்ற 12-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து கடந்த சில நாள்களுக்கு முன், தலைமை துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

Company Paramilitary

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் புகாரைத் தொடர்ந்து, ஆர்.கே.நகரில் துணை ராணுவம் பெருமளவு பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தற்போது, மூன்று துணை ராணுவக் குழுக்கள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக சென்னை வந்துள்ளனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் புகாரைத் தொடர்ந்து மேலும், ஏழு குழுக்கள் வருகை தர உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!