இயக்குனர் கவுதமன் சென்னையில் திடீர் கைது | Director Gowthaman arrested in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (02/04/2017)

கடைசி தொடர்பு:12:04 (02/04/2017)

இயக்குனர் கவுதமன் சென்னையில் திடீர் கைது

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற இயக்குநர் கவுதமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து போராட முயன்ற மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

Director Gowthaman
 

டெல்லியில் 20 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தும் குரல் கொடுத்து வந்தார் இயக்குநர் கவுதமன். இவர் காவல் துறையிடம் முறையான அனுமதி பெற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்களுடன் போராட போவதாக கூறியிருந்தார். இதையடுத்து வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றிணைந்து அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த துவங்கினர். அப்போது காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இயக்குநர் கவுதமன் , 'அனுமதி பெறப்பட்ட பின்பும் காவல் துறை எங்களை கைது செய்திருக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்த போகிறோம்' என கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close