காதலியை சுத்தியால் அடித்துக் கொன்று காதலனும் தற்கொலை

சென்னையில் காதலைத் தொடர மறுத்த காதலியை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. 

செம்மஞ்சேரியைச் சேர்ந்த ஜான் மேத்யூ என்பவரும் கொட்டிவாக்கம் பகுதியைச் ஜெனிபர் புஷ்பா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஜெனிபர் புஷ்பா, நுங்கம்பாக்கம் தனியார் கல்லூரியில் பிசிஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். ஜான் மேத்யூ படித்து முடித்து விட்டு வேலையில்லாமல் இருந்து வந்தார்.

இறுதியாண்டு படித்த ஜெனிபருக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஜெனிபரின் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்ததையடுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜானிடம் காதலை முறித்து கொள்வோம் என்று ஜெனிபர் கூறியுள்ளார். இதனையேற்க மறுத்த ஜான், கடைசியாக ஒருமுறை மகாபலிபுரம் சென்று வரலாம் என்று ஜெனிபரை அழைத்துள்ளார்.

இதற்கு சம்மதித்த ஜெனிபரும், ஜானுடன் மகாபலிபுரம் சென்றுள்ளார். மகாபலிபுரம் அருகே புலிக்குகை பகுதியில் வைத்து, பையில் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் ஜெனிபரின் தலையில் ஜான் பலமாக தாக்கியுள்ளார். இதனால் ஜெனிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு ஜெனிபருடைய துப்பாட்டாவைக் கொண்டு ஜான் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!