உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம்!

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை , மார்ச் 31-ம் தேதிக்குள் மூட, உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

Heavy Crowed in TN Tasmac Shops

இதையடுத்து, வட சென்னையில் 21 கடைகளும் ,தென் சென்னையில் 28 கடைகளும், மத்திய சென்னையில் 30 கடைகளும் மூடப்பட்டன. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 124 கடைகளும், சேலம் மாவட்டத்தில் 137 கடைகளும், கோவையில் 140 கடைகளும் என தமிழகம் முழுவதும் மொத்தம் 3,303 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக கூட்டம் நிலவிவருகிறது. உச்சி வெயிலிலும் முண்டியடித்துக்கொண்டு மதுபானம் வாங்கிச்சென்றனர். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்தக் கூட்டத்தால், ஆங்காங்கே மோதல்களும் நடந்துவருகின்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!