'ஓ.பன்னீர்செல்வம் ஒண்ணும் உத்தமன் கிடையாது' - தீபாவின் கணவர் மாதவன்

கோவையில், புதிய கட்சி துவக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு, தீபாவின் கணவர் மாதவன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், மிகவும் குறைவான நபர்களே கலந்துகொண்டதால், இருக்கைகள் காலியாகக் காணப்பட்டன. மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில், 'தலைமை' என்ற இடத்தில் மாதவன் பெயரோடு தீபாவின் பெயரையும் சேர்த்து, 'மாதவன் தீபா' என்று போட்டிருந்தார்கள்.

Deepa Husband Madhavan

Deepa Husband Madhavan

கூட்டத்தில் பேசிய மாதவன், "பதவி ஆசை பிடித்து, நடுராத்திரியில் பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் ஒண்ணும் உத்தமன் கிடையாது. சசிகலாவுக்கும்  ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இருவரும் ஒண்ணுதான். தீபா அம்மாவுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களின் ஒரே குறிக்கோள், தீபா அம்மாவை முதலமைச்சர் ஆக்குவதுதான். எங்களின் ஒரே எதிர்க்கட்சி தி.மு.க மட்டுமே.

என்னை யாரும் பணத்தால் வாங்க முடியாது. என்னைப் பற்றி தவறான கருத்துகளைக் கூறிவரும் ஓ.பன்னீர்செல்வத்தையும், தி.மு.க.-வையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்றார்.

செய்தி, படங்கள் தி.விஜய்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!